சினிமாவில் ஹீரோக்கள் அழகாக ஹேண்ட்ஸமாக நடித்தால்தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நிலை மாறிவருகிறது. சாக்லேட் பாயாக, ரொமான்ஸ் ஹீரோவாக நடித்த ஹீரோக்கள் கூடகதாபாத்திரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிகொண்டு நடிக்கின்றனர். முன்பெல்லாம் திரைப்படத்திற்காக மொட்டை போட்டு நடிப்பதுதான் மிகப்பெரிய விசயமாக ஊடகங்களில் எழுதப்படும்.
ஆனால் இன்றோ ஆளே உருத்தெரியாமல் மாறி நடிக்கின்றனர். இதுபோன்று ஹீரோக்கள் ரியலாக மாறி நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு அந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக நின்றுவிடுகிறது. கமல்ஹாசன் தொடங்கி ஷாம் வரை பல நடிகர்கள் இயல்பாக ரியலாக தங்களை அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை மகிழ்விக்கின்றனர்.
அழகான ஹீரோக்கள் தங்களை அசிங்கப்படுத்திக்கொண்டு நடித்த கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
12 பி படத்தில் இருந்து சாக்லேட் ஹீரோவாக ரொமான்ஸ் நாயகனாகவே நடித்தவர் ஷாம். ஒரு படத்தில் வில்லனாக கூட நடித்தார். இப்போது 6 மெழுகுவர்த்திகள் படத்தில் தன்னை முற்றிலும் அடையாளம் தெரியாத வகையில் கண்கள் வீங்கி நீள முடி வளர்த்து நடித்திருந்தார் ஷாம். இவரது கதாபாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது.
ஜீவாவின் அறிமுகமும் ரொமான்ஸ் கதாபாத்திரம்தான். ஆனால் ஈ, கற்றது தமிழ், என வரிசையாக வித்தியாசமாக கதாபாத்திரங்களில் நடித்து தன்னை வித்தியாசமான ஹீரோவாக நிரூபித்தார்.
அழகான சாக்லேட் ஹீரோதான் ஆர்யா. நான் கடவுள், அவன் இவன் படங்களில் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நீளமுடி வளர்த்தும், மண்டையை செதுக்கியும் நடித்திருந்தார்.
மீரா, புதியமன்னர்கள் போன்ற படங்களில் ரொமான்ஸ் ஹீரோவாக துறுதுறுப்பாக நடித்த விக்ரமிற்கு மறுவாழ்வு கிடைத்த படம் சேது. அதில் தன்னையே உருக்கி உருத்தெரியாமல் நடித்திருந்தார். தொடர்ந்து பிதாமகன், அந்நியன், என பல கதாபாத்திரங்களில் தன்னையே மாற்றிகொண்டிருந்தார்.
காதல், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த விஷால் அவன் இவன் படத்தில் மாறு கண் கொண்ட திருநங்கையாக நடித்திருந்தார்.
ஆறடிக்கு மேல் உயரம் கொண்ட ஹீரோ சரத்குமார் காஞ்சனா படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவில் திருநங்கையாக நடித்திருந்தார். சூரியன் படத்தில் அவர் மொட்டையாக நடித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல திருநங்கை கதாபாத்திரமும் பரபரப்பாக பேசப்பட்டது.
அழகான அஜீத் பல திரைப்படங்களில் விதவிதமான கெட்டப்களில் நடித்திருந்தாலும், சிட்டிசன் படத்தில் போட்டிருந்த அனைத்து கெட்அப்களுமே ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிகொண்டு நடிப்பதில் இன்றைய நடிகர்களுக்கு முன்னோடி கமல்தான். அவ்வை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களில் கமலின் வேடங்கள் அத்தனை பொருத்தமாக அமைந்திருந்தாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/top-10-kollywood-actors-image-makeover-184959.html