இசையமைக்க வெளிநாடு சென்றால் தான் முடியும் என அடம் பிடித்து தயாரிப்பாளர் செலவில் இலவச வெளிநாட்டு சுற்றுலா சென்று வரும் இசையமைப்பாளர் இவர்.
சமீபத்தில் இவர் சென்னையில் ஒரு புது வீடு கட்டியுள்ளார். இசையைப் பார்ப்பதற்காக அவரது திரை உலக நண்பர்கள் சிலர் புது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டைப் பார்த்து விட்டு, சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் கட்டப் பட்ட அது வீடே அல்ல அரண்மனை என வாய் பிளக்கிறார்களாம் நண்பர்கள். வீட்டைப் போலவே, கார்கள் விஷயத்திலும் இசையின் ரசனையே தனி தானாம். ஹம்மர் கார் உட்பட நான்கைந்து வெளிநாட்டுக் கார்கள் உள்ளதாம் இசையிடம்.
இந்த இசையிடம் சில ட்யூன்களே உள்ளதால், எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியான பாடல்களையே கேட்க முடிவதாக பலரும் புலம்புகிறார்களாம் - திரையுலகிலேயே. ஆனால் இசையோ கவலைப்படுவதாகவே உள்ளதாம்.
மேலும் ரொம்ப ரொம்ப லேட்டாக பாட்டுக்களைப் போட்டுத் தருவதால் பலர் இவரிடமிருந்து விலகவும் ஆரம்பித்து விட்டனராம். இருந்தாலும் கவலைப்படாத இசை.. தமிழ் கைவிட்டால் என்ன தெலுங்கில் தேட்டையைப் போடுவேனே என்று மிக்கி மவுஸ் கணக்கில் பேசிச் சிரிக்கிறாராம்....!
Read more at: http://tamil.oneindia.in/movies/gossip/people-wonders-for-a-house-184957.html
Read more at: http://tamil.oneindia.in/movies/gossip/people-wonders-for-a-house-184957.html
No comments:
Post a Comment