இணைய தளத்தில் சினிமா விமர்சனங்கள் பெரிதும் பட வசூலை பாதிக்கிறது என்ற ஒரு குற்றச்சாட்டு ரொம்ப நாட்களாகவே உண்டு. ஏன்னா முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனா வார இதழ்களில் விமர்சனம் வர 7 டூ 14 நாட்கள் ஆகும் .மக்களுக்கு உண்மையான ரிசல்ட் தெரியவே 2 வாரம் ஆகி விடும் , ஆனா இப்போ அப்படி இல்லை , படம் ரிலீஸ் ஆவது காலைல 11 மணிக்குன்னா நம்மாளு 12 மணிக்கே ஃபேஸ் புக் ல ஸ்டேட்டஸ் போட்டுடறான், இது தேறும் , இது தேறாதுன்னு .இது பட தயாரிப்பாளர்கள் , டைரக்டர்களுக்குப்பிடிப்பதில்லை. ஏன்னா வசூல் பாதிக்குது.
இப்போ லேட்டஸ்ட்டா ரிலீஸ் ஆன ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு நல்ல படம் தான், ஆனால் மக்களிடம் அது சரியான அளவில் போய்ச்சேரவில்லை. இது மிஷ்கினுக்கு மிகுந்த வருத்தத்தை , கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமே இல்லை. ஒரு படைப்பாளியின் வலியை , துயரத்தை , ஆதங்கத்தை \உணர முடிகிறது . ஆனால் சென்னையில் நிகழ்ந்த மிஷ்கின் - ட்வீட்டர்கள் - பிளாக்கர்கள் சந்திப்பில் அவர் பேசியதெல்லாம் ரொம்ப ஓவர் . அவர் பேசிய பேச்சுக்களும் , அதற்கு என் கேள்விகளும்
>>>>>ஒரு படம் எடுத்துப் பாருங்கய்யா அதன் வலி என்னன்னு உங்களுக்குத் தெரியும்>>>>>
சார் , எங்க வேலை படம் எடுப்பதல்ல , படம் பார்ப்பது , நல்லா இருந்தா மக்களிடம் அதைக்கொண்டு போய் சேர்ப்பது , நல்லா இல்லைன்னா போய்டாதீங்க, இது டப்பா என சொல்வது . இதோடு எங்க வேலை முடியுது . போவதும் , போகாததும் ரசிகனின் முடிவு , அதில் நானோ , நீங்களோ தலையிட முடியாது
>>>விமர்சனம் செய்யுங்கள் ஆனால் விமரிசனங்களால் படத்தைக் கொல்லாதீர்கள்
விமர்சனம் என்றாலே படத்தின் நிறை , குறை சொல்வதுதான் . குறை இல்லாமல் ஆனானப்பட்ட மணிரத்னம் , ஷங்கர் , பாலுமகேந்திரா , மகேந்திரன் , கே பாலச்சந்தர் கூட எடுத்து விட முடியாது . எப்படி படத்தோட பிளஸ் சொல்லும்போது சந்தோஷப்படறீங்களோ அதே போல் குறைகளை ஒத்துக்குங்க , ஏத்துக்குங்க . அடுத்த படத்தில் அதை தவிர்க்கப்பாருங்க .ஒரு சினிமா விமர்சகனால் படத்தைக்கொல்லவும் முடியாது , சூப்பர் ஹிட் ஆக்கவும் முடியாது
>>>>எங்களுக்கும் கொஞ்சம் புத்தி இருக்கு என்று நம்புங்கள் . “நீங்களே இவ்வளவு லாஜிக் பாக்கும்போது…எடுத்த எனக்கு தோன்றியிருக்காதா? எனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு
சார், உங்களுக்கு புத்தி இருக்குன்னு நாங்க நம்பறோம் , அதே போல் எங்களுக்கு குறைகளை எடுத்துச்சொல்லும் உரிமை இருக்குன்னு நீங்களும் நம்பனும், ஒத்துக்கனும்
>>>>> பிடிக்கவில்லையென்றால் தாமதமாக விமரிசனம் செய்யுங்கள், படத்தின் வியாபாரம் உங்கள் ஒரு வரி விமர்சனத்தினால் பாதிக்கப்படுகிறது
முந்துபவர்கள்க்கே முன்னுரிமைனு ஆ ராசாவே ஸ்பெக்டரம் பங்கு தாரை வார்த்ததுக்கு விளக்கம் கொடுத்திருக்கார் , அப்படி இருக்கும்போது ஒரு விமர்சகன் விரைந்து விமர்ச்சனம் தரப்பார்ப்பானா? படம் ரிலீஸ் ஆகி ஆடி ஓடி ஆய்ஞ்சு முடியட்டும் , டி வி ல எல்லாம் போட்டு முடிச்சபின் எழுதலாம் அப்டினு வெயிட் பண்ணுவானா? அப்படியே அவன் 30 நாட்கள் கழிச்சு விமர்சனம் போட்டா அதை யார் படிப்பா?
>>>>>>>>இரவு பகல் உழைத்துப் படம் எடுக்கிறோம், நிறைய ஆராய்ச்சி செய்கிறோம். 108 க்கு போன் செய்திருக்கலாமே என்பது எல்லா விமர்சகர்களும் வைக்கும் குற்றச்சாட்டு. அது எனக்குத் தொன்றியிருக்காதா? என் assistant directors சொல்லியிருக்க மாட்டார்களா? குண்டடிப்பட்டு கிடக்கும் அவன் நிலையை அந்த மருத்துவ மாணவன் கணித்து ஆம்புலன்ஸ் வரும் வரை தாங்க மாட்டான் என்பதை உணர்ந்தே அவன் செயல் படுகிறான்.
நீங்க மட்டும் தான் இரவு பகல் உழைத்து படம் எடுக்கறீங்களா? மக்கள் ராப்பகலா கஷ்டப்படறதில்லையா? அவங்க காசு மட்டும் வேஸ்ட் ஆகலாமா? மக்கள் பணம் ஒரு நல்ல படத்துக்கு செலவாகனும்னு எங்களுக்கு அக்கறை இல்லையா? கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் உங்களுக்கு அந்தப்பணத்தை திருப்ப எடுக்க கட்டாயம் , அதே போல் ஒவ்வொரு ரசிகனும் 100 ரூபாய் செலவு செய்யத்தகுதி உள்ள படம் தானா ? என்பதை சொல்ல எங்களூக்கு உரிமை உண்டு
>>>>>>>>ஸ்ப்லினாக்டமி பற்றி 3 மாதாம் ஆய்வு செய்தும் 30 மருத்துவர்களைக் கலந்தாலோசித்தும், அந்தப் பகுதியை ஓர் மருத்துவரை வைத்தே இயக்கினேன்
எத்தனை டாக்டர்களை வெச்சு எடுத்தீங்க ? எத்தனை நர்சை வெச்சு எடுத்தீங்க என்பது மக்களுக்கு அநாவசியம் . என்ன எடுத்தீங்க ? அதை எப்படி மக்களுக்கு கொடுக்கறீங்க என்பதே முக்கியம்
>>>>> பாட்டில்லாமல் புரடியூசரிடம் கதை சொல்லிப்பாருங்கள்..செருப்பால் அடிப்பார்கள். பாட்டு இல்லாம் ஒரு படம் எடுத்ததாலே இன்னும் நிறைய இயக்குனர்/தயாரிப்பாளர்களுக்கு இந்த செயல் ஒரு முன்னுதரணமாக இருக்கும், அதை நீங்கள் பாராட்ட வேண்டும்
என்னமோ நீங்க தான் பாட்டில்லாம படம் எடுத்த முதல் ஆள் மாதிரி பேசாதீங்க , ஆல்ரெடி கமல் -ன் பேசும் படம் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு உட்பட பல படங்கள் பாட்டில்லாமல் வந்து செம ஹிட் ஆகவில்லையா?
>>>>>படம் துவக்கத்துல முதுகுல சிலுவையை சுமந்தவன்… முடிவுல நெஞ்சுல சுமக்கிறான்…இத எத்தன பேரு கவனிச்சீங்க
கே பாலச்சந்தர் கூடத்தான் பல கே பி டச் வெச்சாரு , எத்தனை பேருக்கு அது புரிஞ்சுது ? உங்க குறியீடுகள் , மேதாவித்தனங்கள் இதெல்லாம் சாதா ஜனத்துக்குத்தேவை இல்லாதது . அவன் கவலை எல்லாம் அவனுக்குப்படம் புரிஞ்சுதா ? இல்லையா? என்பதே
>>>>படத்தில் உள்ள சிறு தவறுகளை பூதக் கண்ணாடி மூலம் பெரிது படுத்துகிறீர்கள். ஒரு ஓட்டைப் படத்தில் ( மாமூல் மசாலா ) இருக்கும் லாஜிக் குறைபாடுகளைக் கண்டுக்காமல் அந்த படத்தை அமோக வெற்றிப் படமாக ஓட செய்கிறீர்கள்
ஸ்கூல் ல நல்லாப்படிக்காத பையன் ஒரு தப்புப்பண்ணினா அது யார் கண்ணுக்கும் தெரியாது . நல்லாப்படிக்கிறபையன் சின்னத்தப்பு செஞ்சாலும் அது எல்லாருக்கும் தனியாத்தான் தெரியும் . ஹரி , ராம நாராயணன் மாதிரி மசாலா டைரக்டர்ஸ் தப்பு செஞ்சா மக்கள் அதை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க , ஆனா ஒரு மணி ரத்னம் படம் , ஒரு ஷங்கர் படம்னா கண் ல விளக்கெண்ணெய் விட்டுட்டுப்படம் பார்ப்பாங்க
>>>ஒரு குழந்தையாகப் படத்தைப் பார்க்கச் செல்லுங்கள், ஒரு சைண்டிஸ்டாகப் போகாதீர்கள்
குழந்தையாப்படம் பார்க்கனும்னா வீட்லயே கார்ட்டூன் நெட் ஒர்க்கோ , டோராபுச்சியோ பார்த்துட்டுப்போறோம் , எதுக்கு தியேட்டர் வரனும் ?
>>>>>>>>>”சினிமா என்பது possible vs probable… possibleஆ என்பதை தான் நான் கவனத்தில் கொள்கிறேன். Probable என்றாலே போதும்…ஆபரேஷன் பண்ணவன் உடனே நடப்பது possible இல்ல ஆனா probable. இதை ஒரு டாக்டரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டபின் தான் அந்தமாதிரி எடுத்தேன
என்ன தான் நீங்க சப்பைக்கட்டு கட்டுனாலும் வயிற்றில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த ஒருவன் மேஜர் ஆபரேஷன் செய்யப்பட்டு அதுவும் அரைகுறையான மெடிக்கல் ஸ்டூடண்ட்டின் அவசர ஆபரேஷனில் 24 மணீ நேரம் கூட ஆகாமல் எழுந்து போறான் அதுவும் தப்பி ஓடறான் என்பதெல்லாம் ஓவர் .எத்தனை டாக்டர்ஸ் சொன்னாலும் நம்ப மாட்டோம்
இவை எல்லாம் போக சினிமா விமர்சகர்கள் மேல் வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டுகள் “ நீ ஒரு படம் எடு பார்ப்போம் , இத்தனை குறை சொல்றே இல்ல ? என்பதே . இதுக்கு பதில் ரொம்ப சிம்ப்பிள் . படம் பார்த்து விமர்சிக்க மட்டுமே எங்களுக்குத்தெரியும் , படம் எடுக்கத்தெரியாது ., அதுக்கு அவசியமும் இல்லை , இப்போ நெட்டில் எங்களை உங்களுக்குத்தெரியுது , நீங்க கேள்வி கேட்கறீங்க , ஆனா ஒரு பெஞ்ச் ரசிகன் யார்னே உங்களுக்குத்தெரியாது , டக்னு படம் டப்பா அப்டினு சொல்லிட்டுப்போய்ட்டே இருப்பான் , அவனை என்ன செய்ய முடியும் ? உங்களால ?
thanx - amas madam blog ( miskin speech taken from there)
சில ட்வீட்ஸ்
1. திருமணமான புது மணத்தம்பதிகள் தங்கள் முதல் இரவை 30 நாட்கள் கழித்தே கொண்டாட வேண்டும் - பிரபல இயக்குநர் உருக்கமான வேண்டுகோள்
2 டாக்டர்.ஆபரேஷன் முடிஞ்சுது.பேஷன்ட் பிழைப்பாரா? மாட்டாரா?
எதையும் 30 நாள் கழிச்சுத்தான் சொல்ல முடியும்மா
3 மக்கள் பட விமர்சனம் எதையும் படிக்காமல் தியேட்டருக்குப்போய் ஏமாற வேண்டும் .யார் காசு வேஸட் ஆனா எனக்கென்ன? ஹி ஹி்
4 பொது மக்களைத்தவிர விமர்சகர்கள் ,மீடியாக்கள் யாரும் சினிமாவே பார்க்கக்கூடாது.பார்த்தாலும் வாயைத்திறக்கக்கூடாது .அவசரச்சட்டம் அமல் # சும்மா
5 புரட்சித்தலைவியின் மருத்துவ சேவை 108 பற்றி மிஷ்கின் அவதூறாகப்பேசியது நல்ல வேளை கட்சிக்காரங்க கவனிக்கல
6 நல்ல வேளை.விகடன் ல 51 மார்க் குடுத்ததால தப்பிச்சாங்க ;-))
7 இனிமேல் என் படத்தைப்பார்க்க வரும் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டுதான் படம் பார்க்கனும்னு சொல்லிடுவாரோ?
8 ஓநாய் = இயக்குநர் . ஆட்டுக்குட்டி = தயாரிப்பாளர் . வெட்டி = ஆடியன்ஸ்

No comments:
Post a Comment