மனித உரிமை மீறல் நடந்துள்ள இலங்கை நாட்டில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் அறிவித்துள்ளார்.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அங்கு அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன.
உலக நாடுகள் பலவும் இந்த மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என யோசித்து வருகின்றன. இந்தியா கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கூடாது என பல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், அதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும் இன்றும் தொடர்கிறது. சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வன்முறை, காணாமல் போனதாகவும், நீதிக்கு அப்பாற்பட்டு கொலை செய்வதாகவும் வரும் புகார்கள் தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அங்கு நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்,' என அதிரடியாக அறிவித்துள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/international/canada-boycotts-commonwealth-meet-sri-lanka-184936.html
Read more at: http://tamil.oneindia.in/news/international/canada-boycotts-commonwealth-meet-sri-lanka-184936.html
No comments:
Post a Comment