சென்னை மாநகர காவல் துறை கமிஷனர் புதிய அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை மறுநாள் திறந்து வைக்கிறார்.
வேப்பேரியில் ரூ.25 கோடி செலவில் 10 மாடியில் பிரமாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. புதிய கட்டிடத்தில் அலுவலர்களுக்கு இடமும் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
8-வது மாடியில் கமிஷனர் அலுவலகம் இடம் பெற்றுள்ளது. அதே மாடியில் கூடுதல் கமிஷனர்களின் அலுவலகங்களும் இடம் பெற உள்ளது. 6-வது மாடியில் ஐ.எஸ்.உளவுப்பிரிவு செயல்படும். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் 3-வது மாடியில் இடம் பெறும். தரை தளத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க வசதியாக, பெரிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு தனியாக அறையும் உண்டு. புதிய கமிஷனர் அலுவலகத்தின் திறப்பு விழா வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12-15 மணி அளவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா விழாவில் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி புதிய கமிஷனர் அலுவலகத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். திறப்பு விழா கமிஷனர் ஜார்ஜ் முன்னின்று கவனித்து வருகிறார்.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/new-building-chennai-policde-commis-185020.html
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/new-building-chennai-policde-commis-185020.html
No comments:
Post a Comment