சினிமாவில் ஒரு படத்தில் நடித்தாலும் அஜீத்துடன் நடிக்க ஆசைப்படுகிறார் அலிஷா அப்துல்லா. இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையான அலிஷா அப்துல்லா, இந்தியாவிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒரேயொரு வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர். இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். இவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
அஜீத் குடும்ப நண்பர் அலிஷாவின் பைக்கை வாங்கிக் கொண்டு ரேஸில் கலந்து கொண்டாராம் அஜீத். அந்தளவிற்கு அலிஷாவின் குடும்ப நண்பராம் அஜீத்.
கார் ரேஸில் அஜீத்தும் அலிஷாவும் இணைந்து கார் ரேஸில் பங்கேற்றுள்ளனராம். அஜீத் பங்கேற்கும் ரேஸ் என்றால் மைதானமே நிரம்பிவிடுமாம். இதனால் தமிழ்நாட்டு ரேஸில் பங்கேற்கமாட்டேன் என்று கூறிவிட்டாராம் அஜீத்.
குத்துப்பாட்டு அலிஷாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருகிறதாம். குத்துப்பாட்டுக்கு ஆடச்சொன்னாங்க. பைக் ஓட்டத் தெரிந்த அளவுக்கு டான்ஸ் ஆட வரலையாம்.
நடிக்கிறது கஷ்டம் அலிஷாவைப் பொருத்தவரை பைக் ஓட்டுவது ஈசி, நடிப்பதுதான் கஷ்டமாம். ஆனால் அஜீத் உடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அஜீத் புரிந்து கொள்வார் அஜீத்தும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர். அவரால்தான் என்னை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார் அலிஷா.
விராட் ஹோக்லி ப்ரெண்ட் இந்திய கிரிக்கெட் விராட் ஹோக்லியும் அலிஷாவின் பெஸ்ட் ப்ரண்ட் பட்டியலில் இணைந்துள்ளார். இவரைத் தவிர பிரபலங்கள் பலரும் அலிஷாவின் பைக் பந்தைய திறமைக்கு ரசிகர்களாம்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/ajith-will-understand-me-better-184152.html#slide346230
Read more at: http://tamil.oneindia.in/movies/news/ajith-will-understand-me-better-184152.html#slide346230
No comments:
Post a Comment