வடக்கு டெல்லியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீர் என்று இன்று காலை இடிந்து விழுந்தது.
வடக்கு டெல்லியில் உள்ள பாரா இந்து ராவ் பகுதி அருகே 150 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்த கட்டிடம் இன்று காலை 7 மணி அளவில் திடீர் என்று இடிந்து விழுந்தது.
இதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 6 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழும் சத்தம் கேட்டு ஓடி வந்தோம். இடிபாடுகளுக்குள் இருந்து சல்மான் என்பவரை மீட்டோம். இடிபாடுகளை போலீசாரும், பொதுமக்களும் சேர்ந்து அகற்றி வருகின்றனர் என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/150-year-old-residential-building-collapses-in-north-delhi-185025.html
Read more at: http://tamil.oneindia.in/news/india/150-year-old-residential-building-collapses-in-north-delhi-185025.html
No comments:
Post a Comment